சிதம்பரத்தில் தெய்வீக பக்தர்கள் பேரவை துவக்க விழா மற்றும் நலிவுற்ற 50 பக்தர்ளுக்கு புடவை வேஷ்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, சிதம்பரம் மந்தக்கரையில் உள்ள ஸ்ரீ அருள்மிகு செல்லியம்மன்கோவில் வளாகத்தில் நடந்த விழாவிற்கு தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனரும் தலைவருமான ஜெமினி எம் என் ராதா தலைமை வகித்து 50 பேருக்கு வேட்டி சேலைகள் வழங்கினார்
சமூக ஆர்வலர்கள் ஆர் சம்பந்த மூர்த்தி ஜி ஆறுமுகம் பி செல்வகுமார் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பக்தர்களின் சார்பில் ஏ ராஜசேகர் வரவேற்றார், இவ்விழாவில் விக்கி மாதவன். சூரியபிரகாஷ், ஸ்ரீ ராம் ராஜா, ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். தெய்வீக பக்தர்கள் பேரவை துணைத் தலைவர்களாக ஆர் .சம்மந்தமூர்த்தி, ஜி.ஆறுமுகம், பி.செல்வகுமார்,
பொது செயலாளர்களாக, ஏ. ராஜசேகர், வி.ரகோத்தம்மன், கே.வேல்முருகன், செயலாளர்களாக முத்து, டிரைவர் ரவி, பரணி, நெடுஞ்சேரி, சி.பாலமுருகன், கே.செந்தில்ராஜா, பொருளாலராக எஸ்.செந்தில்குமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
விழாவின் முடிவில் பொதுச் செயலாளர் வி.ரகோத்தம்மன் நன்றி கூறினார், இக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
- இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருமணமாகாமல் இருக்கும் ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு தாலி பட்டு புடவை பட்டு வேஷ்டி மற்றும் சீர்வரிசை சாமான்கள் வழங்கி இலவசமாக திருமணம் செய்து வைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி நடை முறை படித்து வரும் தமிழகமுதல்வர் மு க ஸ்டாலின் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
- சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை மீதேறி சுவாமி தரிசனம் செய்யும் நடமுறை தொடர பொது தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் மேலும் பொது தீட்சிதர்கள் தமிழக அரசோடும் பக்தர்களோடும் இணக்கமாக இருக்க வேண்டும்.
- சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இயற்கை உபதைகளை கழிப்பதற்கு இட வசதி இல்லாத காரணத்தால் கடலூர் மாவட்ட நிர்வாகம் இந்து சமய அறநிலை துறை மற்றும் பொது தீட்சிதர்களும் கோவில் வளாகத்தின் வெளியே இருக்கும் பகுதியில் பக்தர்களின் நலன் கருதி கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.
தீர்மானத்தின் நகலை முதலமைச்சர் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்ச்சிதர்களின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக