தூத்துக்குடி - போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 வருடங்கள் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 23 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி - போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 வருடங்கள் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு.

.com/img/a/

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு 13 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு கங்கன்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பணன் மகன் ராஜகனி (70) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பத்மாவதி புலன் விசாரணை செய்து கடந்த 21.08.2019 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.



இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. சுவாமிநாதன் அவர்கள் இன்று (23.08.2023) குற்றவாளியான ராஜகனி என்பவருக்கு 5 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

.com/img/a/

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி அவர்களையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை பெண் காவலர் மகேஸ்வரி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad