தூத்துக்குடி அருகே சப் இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொலை செய்ய முயற்சி 2 ரவுடிகள் கைது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 2 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி அருகே சப் இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொலை செய்ய முயற்சி 2 ரவுடிகள் கைது.

.com/img/a/

தூத்துக்குடியில் சப் இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொலை செய்ய முயன்றதாக இரண்டு ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாதா கோவில் தெருவில் சேர்ந்தவர் யோகதுரை மகன் சந்தனராஜ் என்ற சண்டல் (42). தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ் மகன் செல்வம் (45). இவர்கள் இருவர் மீதும் கொலை மற்றும் வழிப்பறி உள்பட பல வழக்குகள் உள்ளது. நேற்று இரவு இருவரும் சந்தனராஜ் வீட்டில் இருப்பதாக தென்பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 



தகவல் அளித்த சப் இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் காவலர்கள் சந்தனராஜ் வீட்டுக்கு சென்றனர்.  அங்கு இருவரும் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றதாக தெரிகிறது. உடனே சப் இன்ஸ்பெக்டர் முகிலரசன், எதிரிகள் 2 பேரையும் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தார். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் முகிலரசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad