தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி.

photo_2023-08-11_21-48-19

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணிநடைபெற்றது இந்த பேரணிக்கு பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரி சங்கர் தலைமை வகித்தார். பேராவூரணி நகர வர்த்தக சங்க தலைவர் ராஜேந்திரன், பேராவூரணி அரிமா சங்கத் தலைவர் சிவநாதன், கோகோநெட் இன்ஸ்பயர் அரிமா சங்க தலைவர் தெட்சிணாமூர்த்தி, ரோட்டரி சங்கத் தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பேரணியில் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கையில் போதை ஒழிப்பு பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டு சென்றனர்.பேரணி அண்ணா சிலையில் இருந்து துவங்கி பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு எப்படி ஆளாகிறார்கள் என்பதை விளக்கும் விதமாக குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.


இந்த நிகழ்வில் பேராவூரணி சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார்,வர்த்தக சங்க நிர்வாகிகள் அரிமா உறுப்பினர்கள்,ரோட்டரி உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் த.நீலகண்டன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad