தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 191-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா கடந்த 22 - ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 11-ம் திருநாளான இன்று மதியம் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மீன் வளத்துறை அமைச்சர் அனிதா R.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்து தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக மாநில வர்த்தக அணி செயலாளர் உமரிசங்கர், கிருபா, திருச்செந்தூர் ஒன்றிய கழக செயலாளரும், நகர்மன்ற துணை தலைவருமான செங்குழி ஏபி.ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகர திமுக துணை செயலாளர் தோப்பூர் பெரு.மகாராசன், நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், தினேஷ்கிருஷ்ணா உட்பட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகிலத்திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார், இணைத் தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், செல்வின், வரதராஜபெருமாள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக