புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை பகுதிக்குள் உள்ள எல்லையம்மன் கோயில் தோப்பில் வசிக்கும் பாரதி க/பெ ஸ்ரீனிவாசன் என்பவரின் வீடு சனிக்கிழமை இரவு பெய்த கனமழையால் மேற்கூரை இடிந்து சரிந்தன, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஸ்ரீனிவாசன் கூலி வேலை செய்து வருகிறார் இது குறித்து தகவல் அறிந்த உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்க்கு தன்னுடைய சொந்த பணம் ரூபாய் பத்தாயிரம் மற்றும் தாய்மார் ஒன்றும் வழங்கினார் உடன் கிளைச் செயலாளர் சந்துரு, பஸ்கல், கவி விநாயக மூர்த்தி, இருதயராஜ், ராகேஷ் ஆகியோர் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக