கடந்த 31.05.23 அன்று மாலை கொடி ஏற்றத்துடன் சந்தனக்கூடு விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதனையடுத்து மௌலிது என்னும் புகழ் மாலை ஓதப்பட்டது.இதனை அடுத்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன கொடி ஏற்றத்திலிருந்து 11 ஆம் நாள் இரவு சந்தனக்கூடு விழா ஏற்பாடுகள் துவங்கியது. பல்வேறு வண்ண மின்விளக்கு அழகாக அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம் பக்தர்கள் சூழ ஊர்வலம் புறப்பட்டது. இந்த தர்காவிற்கு வரும் தீராத பணி உள்ள நோயாளிகள் பல வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மகானின் அருளால் நோய் தீர்க்கப்பட்டு வருகிறார்கள். இது பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு கேரளா பாண்டிச்சேரி உள்ளிட்ட டில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் இலகு உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அனைத்து மதத்தினரும் இங்கு வந்து தங்கி இருந்து மகானின் அருள் பெற்று செல்கின்றனர்.நேற்று முன்தினம் சந்தனக்கூடு அனைத்து மதத்தினரால் இழுத்து வரப்பட்டது.யானை முன் செல்ல 21 குதிரைகள் நடனம் ஆடி வர தாரை தப்பட்டை முழங்க வாசனை மிகுந்த சந்தனம் யானை மீது கொண்டுவரப்பட்டு சுல்தான் சையது இப்ராஹீம் ஷஹீது ஒளியுள்ள அடக்கத்தளத்தில் (மக்பரா) பூசப்பட்டது.இந்த வாசகம் இந்த வாசனை மிகுந்த சந்தனத்தை இலங்கை, கேரளா, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தமிழகத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.


இந்த நிகழ்ச்சியில் தமிழக அயலகத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்,.ராமநாதபுரம் எம்பிகே' நவாஸ் கனி,மாவட்ட பிஜேபி தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்கா வாயிலை அடைந்தவுடன் அனைத்து மதத்தினரும் வெளிநாடு வழி மாநிலத்தில் இருந்து வருகை தந்த யாத்திரிகர்களும் பூச்சொரிந்து சந்தனக்கூட்டை வரவேற்றார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஏர்வாடி ஹக்தார் நிர்வாக சபை தலைவர் எஸ். முகமது பாகிர் சுல்தான் லவ்வை, செயலாளர் உதவி தலைவர் ஜே. சாதிக்பாட்சா அளவை உள்ளிட்ட ஏர்வாடி ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையின் உத்தரவின் பேரில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். யாத்திரிகர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்தது என்னால் அவர்கள் தங்களது ஊர்களுக்கு செல்வதற்கு போக்குவரத்து துறையின் சார்பில் பல மாவட்டங்களுக்கு செல்வதற்கு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.
19.6.23 திங்கள் கிழமை மாலை 5.30 மணி அளவில்கொடி இறக்கம் நடைபெறுகிறது.இதனையடுத்து தப்ரூக் என்னும் பக்தர்கள் அனைவருக்கும் நெய் சோறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஏர்வாடி சந்தன கூட்டுக்கு வருகை தந்த தமிழக அயலகத்துறை, மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:முதலில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தமிழக முதல்வருக்கும்,இந்த ஈன்றெடுத்த தாய் தந்தைக்கும்,என்னை இங்கு வரவழைத்த ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் முதலில் நான் நன்றியை ஸலாத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமநாதபுரம் மாவட்டம் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் அனைவரும் பேதமில்லாமல் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான மாவட்டம். தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே மத நல்லிணத்திற்க்கு எடுத்துக்காட்டான மாவட்டம்.லக்கும் தீனுக்கும் வலிய தீன் என்ற சொல்லுக்கு ஏற்ப அதை உணர முடிகிறது. தர்காவிற்கு நேற்று மாலை வந்தேன். வந்து நிகழ்ச்சிகளை பார்வையிட்டு மன நிறைவடைந்தேன். அதைனை அடுத்து மகிழ்ச்சியுடன் சந்தன கூடு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உள்ளேன்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நாயகத்தின் சொல்லின் படி திராவிட மாடல் ஆட்சி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது . மக்களுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்றும், இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு, சமமாக திராவிட மாடல் ஆட்சியில் இங்கு காண முடிகிறது. இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் பேட்டி அளித்தார்.
இதில் சாயல்குடி ஒன்றியச்செயலாளர் உடன் குலாம் மொய்தீன், ஏர்வாடி ஊராட்சி தலைவர் சையது அப்பாஸ் உடன் உள்ளார்.
- ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் அன்வர் அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக