கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) 2023 - 2024 ஆண்டிற்கான முதலாமாண்டு இளங்கலை, இளம் அறிவியல், மாணவர் சேர்க்ககான கலந்தாய்வு கூட்டம் பின்வரும் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


- 30.05.2023 அன்று சிறப்பு சேர்க்கை முன்னாள் படைவீரர்கள் வாரிசுகள், NCC, மாற்றுத்திறனாளிகள்,விளையாட்டு வீரர்கள்.
- 02.06.2023 இளங்கலை தமிழ், இளங்கலை ஆங்கிலம்.
- 05.06.2023 இளங்கலை வணிகவியல், இளங்கலை வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்), இளங்கலை வணிகவியல் நிர்வாகம்.
- 06.06.2023 இளங்கலை வரலாறு, இளங்கலை பொருளியல்.
- 07.06.2023 இளங்கலை அறிவியல் பாடங்கள் வேதியியல்,கணிதவியல், புள்ளியியல்,இயற்பியல்,கணினி அறிவியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி)
- 08.06.2023 இளங்கலை அறிவியல் பாடங்கள் தாவரவியல், புவியியல், மனோதத்துவயியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, மற்றும் விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும்
- இரண்டாம் கட்ட கலந்தாய்வு கலை பாடப்பிரிவுகளுக்கு 14.06.2023
- அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு 16.06.2023 அன்றும் நடைபெறும்
இணையதள வாயிலாக சேர்க்கை விண்ணப்பம் பதிவு செய்த மாணவ /மாணவியர்கள் தங்களது தரவரிசை பட்டியல் விபரங்களை கல்லூரி இணையதள முகவரி (www.acgkarur.ac.in)என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் மாணவ மாணவிகள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ், புகைப்படத்துடன் காலை 9 மணிக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் உடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக