இதையடுத்து அந்த மாணவி சக ஆசிரியையிடம் இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வகுப்பறையில் பள்ளி மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம் செய்த சம்பவம் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது. இது தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து ஆம்ஸ் நல்லதம்பி மீது மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வகுப்பறையில் மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக