இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் (அக்னிபாத்) நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் 21.08.2022 முதல் 01.09.2022 வரை நடைபெற உள்ளது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் (அக்னிபாத்) நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் 21.08.2022 முதல் 01.09.2022 வரை நடைபெற உள்ளது.

193584-army-recruitment
இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் (அக்னிபாத்) நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் 21.08.2022 முதல் 01.09.2022 வரை நடைபெற உள்ளது. இதில் திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மைலாடுதுறை மற்றும் கரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


இந்நிலையில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டணத்தில் நடைபெற்ற ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கண்டறியப்பட்ட குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அசல் கல்வி சான்றுகளை கொண்டு வரவும், தற்போது நடைமுறையில் உள்ள உறுதிமொழிப் பத்திரத்தை (Affidavit) சமர்ப்பிக்கவும் ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


உண்மை நகல் / உத்தரவுபடி அதன்படி, இந்த ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பித்தவர்கள் முகாம் தேர்விற்கு வரும் போது அசல் கல்விச் சான்று (8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு) மற்றும் அதன் நகல், ஜூலை 2022-ல் www.joinindianarmy.nic.in என்ற இணையதன முகவரியில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளபடி குறிப்பிட்ட படிவத்தில் தயார் செய்யப்பட்ட உறுதிமொழி பத்திரம் (Affidavit) மற்றும் அறிவிக்கையில் தெரிவித்துள்ள இதர ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


மேலும் இது தொடர்பான முழு விவரங்களையும் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம், என மாவட்ட ஆட்சியர் திரு.மா. அரவிந்த் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/