நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் தினகரன்- ஜெயலட்சுமி தம்பதியரின் மகன் முருகேசன் . இவர் 2018- ம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் பயின்ற நிலையில், UPSC தேர்வில் ஆர்வம் கொண்டு எழுதத் தொடங்கினார்.
இதற்காக பயிற்சி நிலையங்களுக்கு சென்று பயிற்சியும் மேற்கொண்டு தற்போது UPSC தேர்வில் வெற்றிபெற்று அகில இந்திய அளவில் 537- வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .
இதுகுறித்து முருகேசன் கூறுகையில்:-
பள்ளிப் பருவத்திலேயே ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற கனவு இருந்தாலும், கொரோனா காலகட்டம் தனக்கு திருப்பு முனையாக அமைந்தது. அப்போது மக்கள் படும் கஷ்டங்களை பார்த்து இந்திய ஆட்சிப்பணிக்கு சென்று மக்களுக்கு பணியாற்ற வேண்டும். என்ற எண்ணம் தோன்றியது.
அதோடு மட்டும் அல்லாமல் சகாயம் ஐஏஎஸ் அவர்களது பணி்யும் தன்னை ஈர்த்ததால் UPSC தேர்வு எழுத வேண்டும், அதில் சாதிக்க வேண்டும் என்று உறுதி கொண்டு படிக்க தொடங்கினேன். இரண்டு முறை தேர்வு எழுதி வெற்றிபெற முடியவில்லை. மூன்றாவது முறை வெற்றிபெற்று அகில இந்திய அளவில் 537 வது இடம் பிடித்துள்ளோன். இதன் மூலம் ஐபிஎஸ், ஐஎப்எஸ் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் UPSC தேர்விற்காக பலமணிநேரம் படிக்க வேண்டும் என்பது இல்லை , தற்போதைய நிலவரங்களை செய்திதாள்களை பார்த்து அறிந்து கொள்வது மேக்சீன்ஸ் படிப்பது மற்றும் இன்டர்நெர் காலம் என்பதால் இணையதளம் வாயிலாக பல்வேறு தகவல்களை பெற்றுக்கொண்டு முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளேன்.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எனது பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
திருநெல்வேலி செய்தியாளர் மாடசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக