நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஆராதனை மற்றும் குருத்தோலை பவனி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஆராதனை மற்றும் குருத்தோலை பவனி நடைபெற்றது.

நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஆராதனை மற்றும் குருத்தோலை பவனி நடைபெற்றது. 

குருத்தோலை பவனிக்கு ஆரம்பமாக சேகரத் தலைவர் ஜான் சாமுவேல் ஜெபம் செய்தார். ஆலயத்தில் தொடங்கிய குருத்தோலை பவனி திருமறையூர் வளாகம் மற்றும் சிற்றாலய பகுதிகளை சுற்றி மறுபடியும் ஆலயம் வந்தடைந்தது. 

குருத்தோலை ஞாயிறு ஆராதனையில் சேகர தலைவர் ஜான் சாமுவேல் அருளுரை ஆற்றினார். சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் துரை ஜெபம் செய்தார். குருத்தோலை ஞாயிறு பவணியில் பனை ஓலையினால் செய்யப்பட்ட ஸ்டோல் மற்றும் தொப்பியினை சேகர தலைவர் ஜான் சாமுவேல் அணிந்திருந்து பனையின் முக்கியத்துவத்திற்கான விழிப்புணர்வை சபை மக்களிடத்தில் ஏற்படுத்தினார் .

பவனி மற்றும் ஆராதனைகளில் திருச்சபையார் ஏராளமானோர் பங்கு பெற்றனர. திருமறையூர் சபை நிர்வாகஸ்தார்களான ஜெயபால், தேவதாஸ், ஜான்சேகர்,பாக்யராஜ், ஆசீர் துரைராஜ், ஜீவன் ஜோயல் மற்றும் ஆலய பணியாளர் ஆபிரகாம் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மறுரூப ஆலய நிர்வாகிகளோடு இணைந்து சேகர தலைவர் ஜான் சாமுவேல் செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad