திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மீது பெண் ஒருவர் எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மீது பெண் ஒருவர் எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு!

திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மீது பெண் ஒருவர்  எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு! 

ராணிப்பேட்டை ஏப் 04 -

ராணிப்பேட்டை மாவட்டம்  நவ்லாக் புளியங்கன்னு கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ் எல் எஸ் தியாகராஜன் திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராகவும் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர் காந்தியின் நெருங்கிய ஆதரவாளராகவும் கருதப்படும் தியாகராஜன் இவருக்கு டாஸ்மாக் மூலம் ட்ரான்ஸ்போர்ட் ஒப்பந்தம் உள்ளிட்ட பல சலுகைகள் செய்து கொடுத்துள்ளார். நவ்லாக் புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண்ணிடம் தொழில் தொடங்குவதாக கூறி ரூபாய் 1,25,00,000 ரொக்கப் பணமும் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ளான தங்க நகைகள் அவர்களுக்கு சொந்தமான வீடு ஆகியவற்றை அபகரித்துக் கொண்டதாக ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ராஜலட்சுமி புகார் மனு அளித்துள்ளார். தன்னுடைய பணம் நகை வீட்டு ஆகியவற்றை திருப்பி கேட்டதற்காக ராஜலட்சுமி அடித்து உதைத்து உள்ள எஸ் எல் எஸ் தியாகராஜன் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி அவரை உயிரோடு குளித்து விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார் இதற்கான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை ராஜலஷ்மி காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதாக பொய் பேசி வரும் தமிழ்நாடு அரசு மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள் பாதிக்கப்பட்டுள்ள இந்த பெண்ணிற்கு நீதி கிடைக்குமா உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொதுமக்கள்  மற்றும் சமூக ஆர்வலர் சார்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

மாவட்ட ஒருங்கிணைப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad