ஈரோடு பெரிய மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை உயர்வு : - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

ஈரோடு பெரிய மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை உயர்வு :

IMG-20250406-WA0028

ஈரோடு வ உ சி பெரிய மார்க்கெட்டில் திருச்சி புதுக்கோட்டை புளியங்குடி திண்டுக்கல் ஆந்திரா பெங்களூர் திருச்செங்கோடு சங்ககிரி போன்ற பகுதிகளில் இருந்து எலுமிச்சம்பழம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தற்போது கோடை காலம் தொடங்க உள்ளதால் வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சம் பழம் தேவை அதிகரிப்பால் வரத்தும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தை விட இன்று அதிகளவில் எலுமிச்சம் பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.


வரத்து அதிகரிப்பால் விலையும் உயர்ந்து உள்ளது. இன்று மார்க்கெட்டில் ஒரு எலுமிச்சம்பழம் ரூ. 3 முதல் ரூ. 6 வரை அளவைப் பொறுத்து விலை உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது. இன்னும் கோடை வெயில் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


கடந்த வருடம் கோடை காலத்தில் ஒரு எலுமிச்சம் பழம் ரூ. 12 வரை விற்பனையானது. தற்போது வரத்து அதிகரித்து விலை உயர்ந்தாலும் எலுமிச்சம்பழம் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad