திருக்காட்டுப் பள்ளி -ஏப்-18 - பூண்டி மாதா பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் பாதம் கழுவும் சடங்கு நடைபெற்றது.பூண்டி மாதா பேராலயத்தில் நடைபெற்ற பாதம் கழுவும் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட 12 பேரின் பாதங்களை பேராலய அதிபர் சாம்சன் சீடர்களின் பாதங்களை கழுவி தூய்மை செய்தார். மேலும் நற்கருளை இடமாற்ற பவனியும், நற்கருணை ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேராலய அதிபருடன் துணைஅதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் செபாஸ்டின் கொர்னோலி யுஸ், ஆன்மீக தந்தையர்கள் ஜோசப் ,அருளானந்தம், ஆகியோர் கலந்து கொண்டனர். இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்று புனித வெள்ளி நாளாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கின்றனர். நாளை சனிக்கிழமை நள்ளிரவு புது நெருப்பு மந்திரிக்கப்பட்டு அதிலிருந்து மெழுகுவர்த்தியில் ஒளி ஏற்றி ஏசுநாதர் உயிர்த்தெழுந்தை குறித்து ஈஸ்டர் நாள் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.
தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா நிருபர் ஜே.ஜேசுராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக