அய்யா வைகுண்டரின் ஐம்பதிகளில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் பூப்பதியில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

அய்யா வைகுண்டரின் ஐம்பதிகளில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் பூப்பதியில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அய்யா வைகுண்டரின் ஐம்பதிகளில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் பூப்பதியில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

இதில் ஏராளமான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். முன்னதாக அய்யா வைகுண்டர் பூப் பதியிலிருந்து கொடிபட்டம் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பதவியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. மேலும் 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பணிவிடை, உகப்படிப்பு, உச்சி படிப்பு, வாகன பவனி, தர்மங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்,எட்டாம் நாள் அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டைக்கு புறப்படுதல், பதினொன்றாம் நாள் தேர்பவனி என மிக விமர்சையாக நடைபெறும் என பதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad