பெற்றோர் மற்றும் மனைவிக்காக கோவில் கட்டிய விஜய் டிவி புகழ் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து.
மக்களை சிரிக்க வைப்பது மட்டுமில்லாமல் ஏழை எளியோருக்கு உதவி செய்வது போன்ற பொது சேவைகளில் ஈடுபட்டு வரும் பிரபல நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்தார். மேலும் உடல் நலக் குறைவு காரணமாக மறைந்த பெற்றோர் மற்றும் மனைவிக்காக உனது சொந்த ஊரான மதுரை திருமங்கலம் அருகே உள்ள அரசப்பட்டி கிராமத்தில் கோவில் கட்டி உள்ளார் மதுரை முத்து.
தமிழ் புத்தாண்டான இன்று அந்த கோவில் திறப்பு விழா நடைபெற்றது இதில் 1200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம், கைம்பெண் மற்றும் முதியோருக்கு வேட்டி சேலை, மாணவர்களுக்கு உடைகள் மற்றும் நோட்டு புத்தகம், மரக்கன்றுகள் வழங்கி நீர் மோர் பந்தல் வைத்து கோவில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மற்றும் நகைச்சுவை நடிகர் புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய முத்துக்குமரன் மற்றும் புகழ் கூறுகையில்.
அண்ணன் மதுரை முத்து உணவுப்பூர்வமான மனிதர். பெற்றோர் மற்றும் துணைவியாருக்கு மதுரை முத்து அண்ணன் கோவில் கட்டி உள்ளது ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு இல்லை ஏனென்றால் அதுதான் முத்து அண்ணன். சக கலைஞர் இல்லை அவர்களுக்கு மூத்த கலைஞர் அவரைப் பார்த்து பின்பற்றி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். ஸ்டாண்ட் அப் காமெடியை தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு எடுத்துச் சென்றது மதுரை முத்து அண்ணன் தான். கனவு இந்த பொது சேவைக்கான மூல காரணமாக வித்திட்டவர் எனது தந்தை என முத்து அண்ணன் கூறுவார். தம்பி முத்துக்குமரன் தமிழ் குறித்து பேசும்போது தெளிவான உச்சரிப்புடன் பேசுவார் நான் செய்தி தொகுப்பாளரை போல் பேசுவேன் அதற்கெல்லாம் காரணம் மதுரை மண் தான். நகைச்சுவையின் கடவுளாக வடிவேல் சார் பார்க்கப்படுவதற்கு காரணம் மதுரையின் வட்டார வழக்கு தான். யார் வீட்டுக்கு கூப்பிட்டு கஞ்சி ஊத்தினாலும் சாப்பிடுவேன். மருது என்கிற வார்த்தையில் இருந்து மீனாட்சி, அழகர், பாண்டி அய்யா முதல் அனைத்து வார்த்தைகளும் அழகுதான்.
புகழ் கூறுகையில்.
எல்லாம் நகைச்சுவை நடிகர்களுக்கும் தனியா பாசம், சென்டிமென்ட் அதிகமாக இருக்கும் அது இருப்பதால்தான் நகைச்சுவை செய்ய முடியும். அனைவருக்கும் இனிய தமிழ் பத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று இருக்கக்கூடிய 2K கிட்ஸ் பெற்றோரை மரியாதை இல்லாமல் அழைக்கிறார்கள் அந்த அளவிற்கு காலம் தப்பாக செல்கிறது. இந்த காலத்தில் பெற்றோருக்கு துணைவியாருக்கு கோவில் கட்டி அடுத்தவருக்கு உதவுவது மிகப்பெரிய விஷயம். புத்தாண்டு அதுவுமாக வீட்டுடன் கோவிலுக்கு செல்லாமல் இந்த கோவிலுக்கு வரவேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். அடுத்தவர்களுக்கு யாருக்கும் தெரியாமல் அதிகமாக உதவி செய்பவர். பெற்றோருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பதற்கு இது ஒரு முதல் படியாக இருக்கும் இதை பார்த்து நிறைய பேர் செய்வார்கள் என்று நம்புகிறேன். குட் பேட் அக்ளி திரைப்படம் நல்லா இருக்கும் என்று நம்புகிறேன். இன்னும் படம் பார்க்கவில்லை. நடிக்க வாய்ப்பு கிடைத்தால் இந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன் என கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக