அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்களின் 87 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் சங்க நிறுவன தலைவர் G.K. விவசாய மணி (எ) G. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நம்மாழ்வார் அய்யா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக