ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி - காயல்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 9 ஏப்ரல், 2025

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி - காயல்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் டிலைட்டா ரவி தலைமை வைத்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் கலைவேந்தன், மண்டல செயலாளர் தமிழப்பன், மாவட்ட பொருளாளர் பாரி வள்ளல், மாவட்ட துணை செயலாளர் இந்திரா, செய்தி தொடர்பாளர் வடிவேல் முத்து, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சங்கத்தமிழன், உடன்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன் உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர். மாநில பிரச்சார குழு மேலிட பொறுப்பாளர் வழக்கறிஞர் அகமது சாகிப், 

கருத்தியல் பரப்புரை மாநில துணைச் செயலாளர் தமிழ் குட்டி காங்கிரஸ் தொகுதி அமைப்பாளர் ஜனாப் ஷாஜகான் ,மதிமுக மாவட்ட பொருளாளர் காயல் அமானுல்லாஹ், காயல்பட்டினம் அம்மா பேரவை செயலாளர் அன்வர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் மன்னர் பாஜுல்அஸ்ஹாப், த மு மு க மாவட்ட செயலாளர் யூசுப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டனூர் ஆற்றினர். 

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காயல் நகர செயலாளர் அம்பேத், நிர்வாகிகள் செஞ்சுடர் ,பெருமாள், சுந்தரபாண்டி, அருண், தீபன் உட்பட ஏராளமான ஒரு கலந்து கொண்டு பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad