கமுதி சுற்றுச்சாலை அரண்மனை மேடு அருகே பள்ளி பேருந்து மற்றும் கார் மோதி விபத்து, வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை , - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

கமுதி சுற்றுச்சாலை அரண்மனை மேடு அருகே பள்ளி பேருந்து மற்றும் கார் மோதி விபத்து, வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை ,

 

IMG-20250403-WA0377

கமுதி சுற்றுச்சாலை அரண்மனை மேடு     அருகே பள்ளி பேருந்து மற்றும் கார்   மோதி  விபத்து, வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை ,


இராமநாதபுரம் மாவட்டம் கமுதி புறவழிச்சாலையில் சென்று கொண்டு இருந்த பள்ளி வாகனம் முதுகுளத்தூரில் இருந்து வந்து ஆம்னி வேனும் அரண்மனை மேடு அருகே மோதி விபத்து ஏற்பட்டது இதில் வேனில் வந்தவர்கள் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக தெரிகிறது. 

 

இப்பகுதியில் உள்ள இணைப்பு சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது..


சுற்றுச்சாலை அமைத்ததில் இருந்து சுற்றுச்சாலையில்  வரும் வாகனங்கள் கமுதி- சாயல்குடி சாலையில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து  கடந்த ஒரு மாதமாக நடப்பதாகவும்  அரண்மனை மேடு நான்கு முனை சந்திப்பு, பாப்பாங்குளம் வளைவு அருகே உள்ள நான்கு முனை சந்திப்புகளில் இதே போல் சுற்றுச்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் விபத்தை தொடர்ச்சியாக நடைபெறுவதாகவும் இதற்கு உடனடியாக நான்கு சாலை சந்திப்பு உள்ள பகுதியில்  வேகத்தடை அமைத்து தொடர்ந்து நடக்கும்  வாகன விபத்துகளை  தடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad