சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பாஜக அரசை கண்டித்து காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி அன்னை சோனியா காந்தி மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திரு ராகுல் காந்தி ஆகியோர் மீது நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பாசிச பாஜக மோடி அரசை கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசலில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு ஏ. சி. சஞ்சய் காந்தி அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்கள் கண்டன உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பாசிச பாஜக அரசுக்கு எதிராக கண்டன உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாநில, மாவட்ட, நகர, வட்டார, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், சேவா தளம், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் சிறுபான்மைத்துறை உள்ளிட்ட முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக