வக்ஃபு சட்டத்தை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

வக்ஃபு சட்டத்தை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்!

வக்ஃபு சட்டத்தை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்!

ஆற்காடு, ஏப் 06 -

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் 
இஸ்லாமிய மக்களுக்கு எதிரான 
வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்தும்
தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து தமிழகம் வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆற்காடு நகரத் தலைவர் பியாரேஜான் அனைவரையும் வரவேற்றார். ஆற்காடு கிழக்கு ஒன்றிய தலைவர் வீரப்பா மாவட்ட துணைத் தலைவர் விநாயகம் வாலாஜா நகரத் தலைவர் மணி அரக் கோணம் நகரத் தலைவர் பார்த்தசாரதி மகிலா காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவி வசந்தி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் தீபன் நிர்மல் திமிரி ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ராணிப்பேட்டை நகர செயல் தலைவர் குப்புசாமி மாவட்டத் துணைத் தலைவர் அமானுல்லா பாகவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம்.பி.டி. அசேன்ஷரிப் மாநில பொதுச் செயலாளர் P.ராஜ்குமார் மாவட்ட செய்தி தொடர் பாளர் எஸ்.அண்ணாதுரை மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் கே.ஓ நிஷாத் அஹமத் மாவட்ட பொதுச் செயலாளர் N.நந்தகுமார் ஐ என் டி சி மாவட்ட தலைவர் Y.பிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் GO BACK MODI  என்ற பாதைகையை கையில் ஏந்தியும் வக்ப் சட்ட திருத்ததின் நகலை தீயிட்டு கொளுத்தியும் வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கட்டண கோஷம் எழுப்பப்பட்டது .

ஒருங்கிணைந்த சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad