குடியாத்தம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குடியாத்தம் , ஏப் 2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவை கசக்கி வீசியதோடு காவல் துறையிரை ஏவி தோழமை சங்கத்தின் மாநில நிர்வாகிகளை கைது செய்ய ஆணையிட்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் ஜனநாயக விரோத செயலை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் புகழரசன், செயற்குழு உறுப்பினர் கார்த்திக், துணைத் தலைவர் எழிலரசி அரசு ஊழியர் சங்க வட்ட கிளை செயலாளர் வருவாய்த் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் மற்றும் பிற துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக