திருச்செந்தூர், உடன்குடியில் அதிமுக பூத் கமிட்டி ஆய்வு பணி ...... மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் நேரில் ஆய்வு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

திருச்செந்தூர், உடன்குடியில் அதிமுக பூத் கமிட்டி ஆய்வு பணி ...... மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் நேரில் ஆய்வு.

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைப்படி ....... திருச்செந்தூர், உடன்குடியில் அதிமுக பூத் கமிட்டி ஆய்வு பணி ...... மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் நேரில் ஆய்வு.

2026 நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர் மற்றும் உடன்குடியில் பூத் கமிட்டி ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது. 

இதனை முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ் பி சண்முகநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசி ராஜ், 

திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மகாலிங்கம், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் சுரேஷ் பாபு, ஆர் எம் கே எஸ் சுந்தர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் ராஜா நேரு, திருச்செந்தூர் ஒன்றிய அம்மா பேரவை துணைச் செயலாளர் டாக்டர் என் சுரேஷ், 

ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் வினோத், வழக்கறிஞர் ஜேசுராஜ், அண்ணா தொழிற்சங்க நகர செயலாளர் சுயம்பு, நகர இளைஞரணி செயலாளர் வடிவேல், உடன்குடி ஒன்றிய பொறுப்பாளர் உரக்கடை குணசேகரன், செட்டியாபத்து முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார், 

உடன்குடி பூத் கமிட்டி பொறுப்பாளர் ஞானமுத்து, குலசை ஊராட்சி பொறுப்பாளர் சுடலை, முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதனின் உதவியாளர் பால ஜெயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழர் குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad