ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றி தர மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றி தர மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை!

ஏரி கால்வாய்  ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றி தர மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை!

ராணிப்பேட்டை , ஏப் 06 -

 உடனடி நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் கோரிக்கை 

ராணிப்பேட்டை மாவட்டம் ,கலவை வட்டம், வளையாத்தூர் கிராமம் ,பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஜூன் மடு கால்வாய் ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் மனு. வளையாத்தூர் ஏரி நிரம்பி நான்கு கண் மது வழியாக ,உபரி நீர் வெளியே செல்லும் ஜூன் மடு கால்வாய், ராமலிங் கம் மகன் குணசேகரன் என்பவர் அவரின் நிலத்திற்கு நேராக கால்வாயை குறுக்கி விட்டார். ஆகையால் ,உபரி நீர் செல்வ தற்கு தடையாக கால்வாயை ஆக்கிர மிப்பு செய்து விட்டார் .அது மட்டும் இல்லாமல், அப்பகுதியில் இருக்கும் விவசாய மக்களுக்கும், அறுவடை இயந்திரம் செல்வதற்கும், உழவு வண்டி செல்வதற்கும், வழி இல்லாமல் ,மர வேர்களை போட்டு அவ்வழியை தடை செய்து விட்டார். இதனால் அப்பகுதி விவசாய மக்கள் உழவு செய்வதற்கும் அறுவடை இயந்திரம் செல்வதற்கும் ,ஏரி நிரம்பி உபரி நீர் செல்வதற்கும், ஆக்கிர மிப்பு செய்துள்ளார். ஆகையால் அவரின் மீது துரையின் சார்பாக, நடவடிக்கை எடுக்குமாறும் ,   அக்கால்வாயை மீண்டும் சரி செய்து விவசாய மக்களுக்கும் ஏரியின் உபரி நீர் செல்வதற்கும் வழியை சீரமைத்து தருமாறு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களும், பொது பணித் துறை அலுவலரும் ,மாவட்ட வருவாய் அலுவலரும், கோட்டாட்சியர் அலுவலரும், கலவை தலைமை வட்டாட்சியர் அவர் களும், மாம்பாக்கம்வருவாய் அலுவலரும் வளையாதுர் கிராம அலுவலரும் வளை யாத்தூர் கிராம உதவி அலுவலரும்  அனைத்து துறை அலுவலர்களும்  சேர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு  ராணிப்பேட்டை மாவட்டம் , சமுக ஆர்வலர்கள் சார்பாகவும், ஏரி கால்வாய்  ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றி தருமாறு கிராம பொது மக்கள் கோரிக்கை

ஒருங்கிணைந்த சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad