அரசு வழங்கிய நிலங்களை முறைகேடாக விற்பனை செய்தும் மற்றும் அந்நிலங் களில் உள்ள மரங்களை வெட்டி பணமாக்கும் ஊராட்சி மன்ற தலைவர் ! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

அரசு வழங்கிய நிலங்களை முறைகேடாக விற்பனை செய்தும் மற்றும் அந்நிலங் களில் உள்ள மரங்களை வெட்டி பணமாக்கும் ஊராட்சி மன்ற தலைவர் !

ராணிப்பேட்டை, ஏப் 02 -

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மோசூரில் அரசு வழங்கிய நிலங்களை முறைகேடாக விற்பனை செய்தும் மற்றும் அந்நிலங்களில் உள்ள மரங்களை வெட்டி பணமாக்கும் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் ராணிப் பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மோசூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு விளைநிலம் இல்லா ஏழை எளிய மக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலங்களை தமிழக அரசு வழங்கியது இந்த நிலங்களை 30 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யவோ குத்தகைக்கு விடவோ கூடாது என விதிமுறை உள்ள நிலையில் மோசூர் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் விதிமுறைகளை மீறி அவரின் உறவினரான சித்திக்கு வழங்கிய அரசு நிலத்தை தன் பெயருக்கு மாற்றி அதில் இருந்த செம்மரம் வேப்பமரம் மாமரம் உள்ளிட்ட சுமார் 6 டன் அளவுக்கு மரங்களை வெட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மோனிகாவிடம் விசாரணை செய்த போது அந்த இடம் அவருக்கு கொடுக்கப்பட்ட இடம் இல்லை என்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் மரம் வெட்டி உள்ளது உறுதியாகி உள்ளது இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் கார்த்திக்கிடம்  விசாரித்தபோது கிராம நிர்வாக அலுவலரும் வருவாய் ஆய்வாளரும் ஆற்காடு வட்டாட்சியர் பாக்கியலட்சுமிக்கு விசாரணை செய்து அறிக்கை கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வட்டாட்சியர் பாக்கியலட்சுமி இடம் விசாரித்த போது வருவாய் ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கிறார். அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தார்.  எனவே இதுபோன்று அரசுக்கு எதிராக அரசு வழங்கிய நிலத்தை விற்பனை செய்பவர் மீதும் மரங்கள் வெட்டுபவர் மீதும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே சுரேஷ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad