உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவு. தூத்துக்குடி மாவட்ட தேவாலயங்களில் துக்க மணி ஒலிக்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவு. தூத்துக்குடி மாவட்ட தேவாலயங்களில் துக்க மணி ஒலிக்கப்பட்டது.

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த 
போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவு. தூத்துக்குடி மாவட்ட தேவாலயங்களில் துக்க மணி ஒலிக்கப்பட்டது.

உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக கருதப்படுபவர் போப் ஆண்டவர் என அழைக்கப்படும் போப் பிரான்சிஸ்(88). அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த இவர் 12 ஆண்டு காலம் இந்த பொறுப்பில் இருந்து வந்தார். ஐரோப்பிய நாடான இத்தாலியின் தலைநகர் ரோமின் வாடிகன் நகரத்தில் அவர் வசித்து வந்தார்.

பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மூச்சுக்குழாயில் அழற்சி இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, ரோம் நகரில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக சேர்க்கப்பட்டார். 

இந்நிலையில் அவர் உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். இதனை வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

போப் ஆண்டவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடி மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவ ஆலயங்களிலும் மாலை 4 மணிக்கு துக்க மணி ஒலிக்க வேண்டும் என மறை மாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி வேண்டுகோள் விடுத்தார். 

அதன்படி மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயத்திலும் துக்க மணி ஒலிக்கப்பட்டது. மேலும் ஆலயங்களில் அரை கம்பத்தில் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad