ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் குடியிருப்பு தீ பிடித்து பொருட்கள் நாசம்
நீலகிரி மாவட்டம் உதகை பகுதிக்கு உட்பட்ட தங்காடுஓரநள்ளி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் குடியிருப்பில் மருத்துவ அலுவலர் ஒருவர் தங்கி பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்கள் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்று இருந்தார்.
இந்நிலையில் நேற்று விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பி குடியிருப்பு வீட்டை திறந்த போது முற்றிலுமாக தீக்கு இரையாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தன்னுடைய மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்தனர். ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது . ஆனாலும் சுமார் ஒரு இலட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமடைந்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக