கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மேயர் தலைமையில் நடைபெறுகிறது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மேயர் தலைமையில் நடைபெறுகிறது

IMG-20250414-WA0676

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மேயர் தலைமையில் நடைபெறுகிறது. 


நாளை செவ்வாய்க்கிழமை அன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது கோயமுத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் மேயர்  ரெங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் தலைமையிலேயே பொது மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண நடைமுறை எடுக்கப்படும் இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு இறப்பு சான்றிதழ்கள் ,மின்விசிறி, குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாள சாக்கடை ,தொழில் வரி, சொத்து வரி, காலியிடம் ,மருத்துவம்,  சுகாதாரம் ,கல்வி உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்தையும் இந்த மனு மூலமாக வழங்கலாம் இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான வற்றை மேற்கொள்வார்கள் எனவே தேவையுள்ள மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் மனுக்களை கொடுக்கலாம்.  கோவை நகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad