தீயணைப்பு துறையின் சார்பில் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 24 ஏப்ரல், 2025

தீயணைப்பு துறையின் சார்பில் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி.

தீயணைப்பு துறையின் சார்பில் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி

கன்னியாக்குமரி மாவட்டம் : தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் சத்தியக்குமார் உத்திரவின் பெயரில், தக்கலை நிலைய அலுவலர் ஜீவன்ஸ் மேற்பார்வையில்,

தக்கலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் வைத்து, தீயணைப்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.
இதில், சமையல் எரிவாயு கசிவு மற்றும் தீப்பிடித்தல், மின் கசிவினால் ஏற்படும் தீ விபத்து போன்றவைகளுக்கு பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்.? எவ்வாறு தீயணைக்க வேண்டும், 

மிக முக்கியமாக தீ விபத்து ஏற்படும் போது பொதும க்கள் காயமின்றி தப்பித்து கொள்ளும் வழிமுறை என்ன.? என்பது பற்றி தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர். 

இந்நிகழ்ச்சியை மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad