தமிழக அரசின் அறிவிப்புகளுக்கு
ஆசிரியர் இயக்கங்கள் வரவேற்பு, நன்றி, வேண்டுகோள்!
வேலூர் , ஏப் 28 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழ் நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 9 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள் அரசின் இந்த அறிவிப்புகளை நாங்கள் மனதார வரவேற்கின்றோம். மேலும் மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல் நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவு நடைமுறை படுத்த வேண்டுகின் றோம். இதுகுறித்து ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர், தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த் தனன் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ர.ஜெயகுமார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலா ளர் ஆ. ஜோசப்அன்னையா, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு தமிழ்நாடு இடை நிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் க.குணசேகரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் 10 அம்ச கோரிக்கைகள் குறித்து அறிவிப் பினை வெளியிட வேண்டுமென கோரி போராட்டங்கள் நடத்தினோம் எங்களது வேண்டுகோளை ஏற்று அரசு இன்று அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாடு அரசின் தேர்தல் கால வாக் குறுதிகளில் அளிக்காத சில அறிவிப்பு களையும் அறிவித்துள்ளது. ஆனால் மிக முக்கிய கோரிக்கையினை பழைய ஓய்வூதிய திட்டம் செப்டம்பர் மாதம் அறிக் கை பெற்று நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவிப்புகளில் குறிப்பாக மகளிர் தங்களது மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகான் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் இருந்த நிலை மாறி இன்று மகப்பேறு விடுப்பு காலமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
பண்டிகைக்கால முன்பணம் ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப் பும் அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கான முன்பணம் ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்களது திருமணத்திற்கான முன்பணம் கடன் தொகையாக ரூபாய் 5 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப் பினையும் நாங்கள் மனதார வரவேற்கின் றோம்.ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் 10 அம்ச கோரிக்கைகளில் இரண்டு அம்சங் கள் உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
மீதமுள்ள கோரிக்கைகளையும் அரசு உடனடியாக அறிவிக்கும் என்று எதிர் பார்க்கின்றோம்.மேலும் கடந்த பல ஆண்டுகளாக 5முறை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு மேல் நிலைப் பள்ளி களில் பணியாற்றி வரும் பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் 128 பேரு டைய பணியினை வரன்முறை செய்யப் பட வேண்டும், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடவும் மெல்லக் கற்கும் மாணவர்களின் நலனைகருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப் பள்ளி களிலும் தொழிற்கல்வி பாடம் கட்டாய மாக்கப்படவேண்டுமென கேட்டுக்கொள் கின்றோம்.சாலைப் பணியாளர்களின் 41 மாத காலம் பணி காலமாக அறிவிக்க வேண்டும், அங்கன்வாடி, சத்துணவு, ஊர்ப்புற நூலகர்கள், எம் ஆர் பி செவிலி யர்கள், அவர்களுக்கான முறையான கால முறை ஊதியம் அறிவிக்கப்பட வேண்டும்.தமிழக முழுவதும் காலியாக இருக்கக்கூடிய 6 லட்சம் காலிப்பணி யிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும், இடைநிலை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர் போன்ற ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்ற அறிவிப்பு இன்று வரையிலும் நடை முறைப்படுத்தப்படாமல் உள்ளது உயர்வு கல்விக்கான ஊக்க ஊதியம் இன்னமும் வழங்கப்படவில்லை உள்ளிட்ட கோரிக் கைகளும் நிலுவையில் உள்ளன அதை யும் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.மாநிலம் முழுவதும் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடவும் மெல்லக் கற்கும் மாணவர்களின் நலனை கருத் தில் கொண்டு அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடம் கட்டாயமாக்கப்படவேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.என்று ஜாக்டோ பேர மைப்பின் சார்பில் நிர்வாகிகள் செய்தி யாளர்களை சந்தித்தனர் இந்த சந்திப் பில் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர், தொழிற்கல்வி ஆசிரி யர் கழக மாநிலத்தலைவர் முனைவர் செ.நா. ஜனார்த்தனன், தமிழ்நாடு முது நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ர.ஜெயகுமார், தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாவட்ட செயலாளர் ஆ. ஜோசப் அன்னையா, தமிழ்நாடு ஆசிரியர் முன் னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் க.குணசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக