வேலூர் , ஏப் 2 -
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்றுவது தொடர்பாக அரசியல் கட்சிகள். தொழிற்சங்கங்கள். அரசு அலுவலர் சங்கங்கள், மதம் மற்றும் சாதிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (02.04.2025) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் அ.செந்தில்குமார் (வேலூர்), செல்வி சுபலட்சுமி (குடியாத்தம்). மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வே. முத்தையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக