ஜமாஅத் மற்றும் திராவிட நட்புக் கழகம் ஒருங்கிணைத்த வக்ப் சட்டத்திருத்த மசோதாவை இரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன மாநாடு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

ஜமாஅத் மற்றும் திராவிட நட்புக் கழகம் ஒருங்கிணைத்த வக்ப் சட்டத்திருத்த மசோதாவை இரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன மாநாடு!

ஜமாஅத் மற்றும் திராவிட நட்புக் கழகம் ஒருங்கிணைத்த வக்ப் சட்டத்திருத்த மசோதாவை இரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன மாநாடு!
ராணிப்பேட்டை ,ஏப் 13 -

ராணிப்பேட்டை மாவட்டம் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் திராவிட நட்புக் கழகம் ஒருங்கிணைத்த வக்ப் சட்டத்திருத்த மசோதாவை இரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன மாநாடு மிக எழுச்சி யுடன் நடைபெற்றது. மாவட்டத்தின் அனைத்து பகுதியிலிருக்கும்  ஜமாஅத் பொருப்பாளர்களின் கடின உழைப்பின் பலனாக இந்த மாநாட்டில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்று வெற்றி பெற வழி வகை செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
கண்டன உரையாற்ற தமிழ் மாநிலத்தின் ஆளுமைகள் வருகை புரிந்தது இந்த மாநாட்டின் சிறப்பம்சமாக இருந்தது.
தலைமை திராவிட நட்புக்கழகத்தின் தலைவர் தோழர் ஆ.சிங்கராயர் அவர்கள் வரவேற்புரை சர்ஜமாஅத் தலைவர் 
ஹாஜி அப்துல் வாஜித் அவர்கள்
நெறியாழ்கை திராவிட நட்புக்கழகத்தின் 
துணைத்தலைவர் ஸ்ரீவித்யா அவர்கள்
துவக்கவுரை மாவட்ட அரசு காஜி 
மௌலவி அப்துல் கறீம் காஷிபி ஹழ்ரத் 
நோக்கவுரை  இராணிப்பேட்டை சர்ஜமாஅத் ஒருங்கிணைப்பாளரும் 
திராவிட நட்புக் கழகத்தின் பொதுச் செயலாளர் மு.முஹம்மது ஹசன் 
கண்டன உரை மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ. இராசா MP அவர்கள்
துணைப் பொதுச்செயலாளர் திராவிட முன்னேற்றக் கழகம் வக்ப் வாரிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரு மான நவாஸ்கனி MP  அவர்கள்
திராவிட நட்புக்கழகத்தின் நிறுவனர் 
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் 
தலைவர் திராவிட இயக்க தமிழ பேரவை 
கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள்  மாவட்ட செயலாளர் திராவிட முன்னேற்றக் கழகம் அருட்தந்தை ஜெகத்கஸ்பர் அவர்கள்.நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள்
துணைப்பொதுச் செயலாளர் விசிக.
ஆகியோரின் கருத்தாற்றல் மிக்க கண்டன உரை மிக நேர்த்தியாக அமைந்தது. இறுதியாக தோழர் தீபன்
திராவிட நட்புக்கழக பொருளாளர்
நன்றியுரையோடு மாநாடு நிறைவு பெற்றது.

 ஒருங்கிணைந்த சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad