வேலூர் மாவட்டம் குடியாத்தம் எவரெஸ்ட் கேம்ஸ் கிளப் சார்பாக கபடி போட்டி!
குடியாத்தம் , ஏப்ரல் 1-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கி அவை நகரில் எவரெஸ்ட் கேம்ஸ் கிளப் சார்பில் இரவு மின் ஒளியில் கபடி போட்டி நடைபெற்றது. வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணை தலைவர் இராசி தலித் குமார் தலைமை தாங்கினார் இந்தப் போட்டியை குடியாத்தம் மக்கள் பேரவை பொதுச் செயலாளர்D.P. நோவா துவக்கி வைத்தார் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் நகர மன்ற உறுப்பினர் மனோஜ் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் ரியல் எஸ்டேட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்வாசுதேவன் துணைத் தலைவர் ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்
இந்த போட்டியில் 60 அணிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கு நடுவர்களாக சிவராமன் மோகன் சேட்டு போன்றோர் பணியாற் றினார். இந்த போட்டியை எவரெஸ்ட் கபடி கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக