![]() |
ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுந்தரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (29ம் தேதி) முதல் வரும் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
அதன்படிப்படையில் அரச அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடையே அலுவலகத் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், கையெழுத்துப்போட்டிகள், அறிவியல் தமிழ், கணினித்தமிழ் குறித்த வினாடி வினா நிகழ்ச்சிகள், தலைப்பு கொடுக்கப்பட்டவுடன் எந்தவிதத் தயாரிப்புமின்றி உடனடியாகப் பேசும் பேச்சுப்போட்டி, படத்தை அடிப்படையாகக் கொண்டு கதை சொல்லும் போட்டி, தமிழ் புதினங்கள்/கவிதை வாசிப்புப் போட்டி, அலுவலர்களிடையே குறிப்பு எழுதும் போட்டி, கணினித்தமிழ் தொடர்பான போட்டிகள், தமிழ் இலக்கியங்கள் தொடர்பான கதை சொல்லும் போட்டிகள், தமிழ் இலக்கிய மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தி பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
எனவே, அந்தந்த அரசு தலைமை அலுவலகங்கள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் நிழற்படங்கள் மற்றும் அறிக்கையினை மாவட்ட நிர்வாக மின்னஞ்சல் (collectorateerode@gmail.com) முகவரிக்கும், தமிழ் வளர்ச்சித்துறை ល់ (tamilvalarchi.erode@gmail .com - தொடர்புக்கு - 9840821996) முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக