ஈரோடு மாநகராட்சியில் மாதந்தோறும் 3வது சனிக்கிழமையில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரும், கூடுதல் ஆட்சியருமான அர்பித் ஜெயின் அறிவுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரும், கூடுதல் ஆட்சியருமான அர்பித் ஜெயின் தலைமையில், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநகராட்சி அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி
முகமை திட்ட அலுவலரும், கூடுதல்
ஆட்சியருமான அர்பித் ஜெயின்
கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில்
மாதந்தோறும் 3வது சனிக்கிழமையில்,
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை
தவிர்க்கும் வகையில், பொதுமக்கள்
மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த
வேண்டும். குறிப்பாக, பள்ளி,
கல்லூரி, காய்கறி மார்க்கெட், பஸ்
ஸ்டாண்ட் உள்ளிட்ட மாணவர்கள்
மற்றும் பொதுமக்கள் அதிகளவில்
கூடும் இடங்களில், விழிப்புணர்வை
ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக்
பயன்பாட்டை தடுக்கும் வகையில்,
கண்காணிப்பு பணியில் தொடர்ந்து
ஈடுபட வேண்டும். இவ்வாறு அர்பித்
ஜெயின் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் நா. நாகப்பன், பெருந்துறை தாலுகா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக