கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் குடிநீர் வீணாவதை தடுக்க மக்கள் கோரிக்கை.. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் குடிநீர் வீணாவதை தடுக்க மக்கள் கோரிக்கை..

IMG-20250401-WA0195

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் குடிநீர் வீணாவதை தடுக்க மக்கள் கோரிக்கை..


கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் கே ஜி மில் பேருந்து நிறுத்தம் அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதனால் குடிநீர் வீணாவதோடு சாலையில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் குறிப்பாக பள்ளி மற்றும் மாணவர்கள் செல்லும் நேரத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் தண்ணீர் தேங்கி நிற்பதால் ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உடனடியாக தண்ணீர் குழாயை அடைக்க வேண்டும் என பகுதி மக்கள் இன்று ஏப்ரல் 1 தேதி கோரிக்கை விடுத்துள்ளனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோயம்புத்தூர் மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad