அருள்மிகு சுப்பிரமணியர் - வள்ளி திருகல்யாண வைபவம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை தொடர்ந்து இன்று ஶ்ரீ சுப்பிரமணியர் - வள்ளி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. திருகல்யாணத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்த தேங்காய் 52,000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. அபிஷேக தேங்காயை S. பழனி ஆண்டவர்-நாகஜோதி குடும்பத்தார் ஏலம் எடுத்தனர். திருக்கல்யாணத்தில் பரம்பரை அறங்காவலர் TBSSCS முத்துராஜன் M.Com அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார், கி.சுந்தரி செயல் அலுவலர் உடனிருந்தார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக போடிநாயக்கனூர் செய்தியாளர் மாரீஸ்வரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக