மஞ்சூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதிக்கு உட்பட்ட மேல்கொட்டரகண்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் . இவர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்து வந்துள்ளார். இவர் இப்பொழுது மஞ்சூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்ததாகவும் மனைவியை பிரிந்து தனியாக தான் வசித்து வந்ததாகவும் கூறுகின்றனர். இவர் தங்கி இருந்த வீட்டில் துர்நாற்றம் வீசியதால் அருகில் குடியிருந்தவர்கள் காவல்துறையிடம் புகார் அளிக்கும் நிலையில் மஞ்சுர் காவல்துறையினர் உடனடியாக சென்று அவர் வீட்டை சோதனை செய்யும் பொழுது அவர் மர்மமான முறையில் அழுகிய நிலையில் சடலம் கிடந்ததாக தெரிவித்துள்ளனர். உடல் அழகிய நிலையில் இருந்ததால் இயற்கை மரணமா தற்கொலையா என்று போலீசார் தீவிர விசாரணையில் மேற்கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக