வாணியம்பாடியில் தனியார் பள்ளி காவலளியை பட்டப்பகலில் மர்ம நபர்களால் குத்திக்கொலை.
வாணியம்பாடி, ஏப்.7-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இக்பால் சாலையில் தனியாருக்கு சொந்தமான நர்ஸரி, பிரைமரி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில்
ஷாகிராபாத் பகுதியை சேர்ந்த முஹம்மத் இஃர்பான் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 7.30 மணிக்கு தனது மிதிவண்டியில் பணிக்கு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் கள் முஹம்மத் இஃர்பானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.
முஹம்மத் இஃர்பான் வலியால் துடித்துக் கொண்டு சற்று தூரம் நடந்து சென்று ஒரு வீட்டின் முன்பாக இரத்த வெள்ளத் தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர காவல்துறை யினர் இஃர்பானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து வாணியம்பாடி துணை காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல் துறையினர் இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து அப்பகுதி யில் உள்ள சிசிடிவி கேமிராக் களை ஆய்வு செய்து விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனர்.சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளியிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி தாலுகா செய்தியாளர்
R.மஞ்சுநாத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக