ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் சமத்துவ நாள் விழா! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் சமத்துவ நாள் விழா!

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் சமத்துவ நாள் விழா!

காட்பாடி , ஏப் 14 -

வேலூர் மாவட்டம் காட்பாடி, டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்  சட்ட மா மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்க ளின் 134 ஆவது பிறந்த நாளான இன்று சமத்துவ நாளில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சி தலைவர் சுப்புலக்ஷ்மி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கழக பொதுச் செயலா ளர்  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் MA.BL.,  கலந்துக்கொண்டு 
நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊனமுற் றோருக்கான மூன்று சக்கர வாகனங்கள் மகளிர்க்கான நல திட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் 
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவர் D.M.கதிர் ஆனந்த MP அவர்கள் அணைக் கட்டு சட்டமன்ற உறுப்பினர், வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார்  
வேலூர்  சட்டமன்ற உறுப்பினர், மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் 
மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு மாநகராட்சி மேயர் A.சுஜாதா ஆனந்தகுமார் துணை மேயர் M.சுனில் குமார் மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா,  ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், துணை தலைவர் சரவணன்,  மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன் மற்றும் மாநில துணை செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நகர பகுதி செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad