திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீகருப்பண்ணசாமி கோயில் குடமுழுக்கு விழா
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையம் எதிரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கருப்பண்ணசாமி கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
ஸ்ரீ கருப்பண்ணசாமி கோயில் குடமுழுக்கு செய்ய திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் வியாழக்கிழமை காலை விநாயகர் வழிபாடு மற்றும் காவிரி நதியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து, மாலை முதல் காலை யாக பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை 2 ஆம் கால யாக பூஜையில் நிறைவாக பூரணாஹூதி செய்யப்பட்டு கடங்கள் புறப்பாடாகி கோயில் வலம் வந்து 9.00 மணிக்கு விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பணி மற்றும் குடமுழுக்கு ஏற்பாடுகளை அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை மருத்துவர் தவழ்மதி செய்திருந்தார். விழாவில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தீபிகாராணி, சித்த மருத்துவர் பாலசங்கரி, செவிலியர்கள், பணியாளர்கள், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் ப.மெய்யழகன், முன்னாள் விஏஓ ஜெ. கலியமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா ஜே.ஜேசுராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக