நெல்லை வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் 2024-ஆம் 25 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு 804 பணி நியமன ஆணைகள் வழங்கும் ஜுபிளண்ட் விழா பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது
இந்த ஆண்டு TCS,CTS,INFOSYS மற்றும் பல முன்னணி நிறுவனங்களில் இருந்து 804 பணி நியமன ஆணைகளை இறுதியாண்டு மாணவ மாணவியர் பெற்றனர்
வேலைவாய்ப்பை பெற்ற மாணவர்கள் ஆண்டு வருமானம் அதிகபட்சமாக 17.5 லட்சம் வரை பெற்றுள்ளனர்
512 மாணவர்கள் பயிற்சியின் ( Internships ) மூலம் படிப்பை தொடரும் போது சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்
135 பன்னாட்டு நிறுவனங்கள் கல்லூரிக்கே வருகை தந்து வளாகத் தேர்வு நடத்தி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளனர்
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஆணைகள் வழங்கப்பட்டு பெற்றோர்களும் கெளரவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் அனைத்து ஸ்காட் கல்வி குழுமத்திற்கும் பொதுமேலாளர் (வளர்ச்சி) ஜார்ஜ் கிளிங்டன், பொதுமேலாளர் (நிர்வாகம்) கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர்கள் ஜான்கென்னடி, முகமது சாதிக், தொழில் முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன், வேலைவாய்ப்பு துறை இயக்குநர் அன்னப்பாண்டி, திறன் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பொன்னு கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வளாக மேலாளர் சகரியா கேப்ரியல் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக