அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் திருக்கல்யாணம் வைபோக பிரம்மோற்சவ விழா!
வாலாஜாப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபோக பிரம்மோற்சவ விழாவில் திரளான பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை பூக்கார வீதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் திருக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டும் கடந்த 01-ஆம் தேதி அன்று பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாட்கள் பல்வேறு அலங் காரங்களில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் திருவீதி உலா நடை பெற்று வந்த நிலையில் 5-ஆம் நாளான இன்று மூலவர் காமாட்சி மற்றும் ஏகாம் பரநாதர் பால், தயிர், தேன், குங்குமம், சந்தனம்,மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை கலந்த திரவியங் களால் கொண்டு அபிஷேகம் நடந்து பல்வேறு வண்ண பூ மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இரவு கோவிலில் உள்ள மணி மண்டபத்தில் காமாட்சி மற்றும் ஏகாம்பரநாதர் உற்சவர் சுவாமி களுக்கு பல்வேறு வகையான புஷ்பா மாலைகள் அணிவிக்கப்பட்டு தங்க ஆபரணங்களால் அலங்காரம் செய்து சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் வளர்த்து மங்கல வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாணம் வைபோகம் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது முன்னதாக ஊரில் வசிக்கும் பெண்கள் ஏராளமானோர் சீர்வரிசை பொருட் களுடன் நாதஸ்வரம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர் தொடர்ந்து சுவாமிகளுக்கு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடந்து மங்கல தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்த திருக்கல்யாண வைபவ நிகழ்வில் வாலாஜாபேட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ் ஜே சுரேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக