தாராபுரம் பெரிய கடைவீதி பகுதியில் செல் பார்க் எனும் தனியார் செல்போன் கடை செயல்பட்டு வருகிறது அந்த கடைக்கு நேற்று மதியம் கேரளா போலீசார் குற்றவாளி ஒருவரை அழைத்து வந்து விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது தாராபுரம் பெரிய கடைவீதியில் கேரளா மலப்புரத்தை சேர்ந்த நபர் செல்போன் கடை நடத்தி வருகிறார். அங்கு புதிய மற்றும் பழைய செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் கேரளா போலீசார் சிலர் குற்றவாளி ஒருவரை கையில் விலங்கிட்டு அந்த கடைக்குள் வைத்து விசாரணை நடத்தினர். எதற்காக கேரள போலீசார் அங்கிருந்து இங்கு வந்து விசாரணை நடத்தினர்,குற்றவாளியை இங்கு வந்து கைது செய்தார்களா? அல்லது கேரளாவில் கைது செய்து இங்கு அழைத்து வந்தார்களா?எந்த வழக்கிற்காக அவர் கைது செய்யப்பட்டார்?செல்போன் கடைக்கும் குற்றவாளிக்கும் என்ன தொடர்பு என பல்வேறு கேள்விகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Post Top Ad
ஞாயிறு, 13 ஏப்ரல், 2025
தாராபுரம் செல்போன் கடையில் கேரள போலீசார் விசாரணையால் பரபரப்பு
Tags
# தாராபுரம்
About Reporter
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
தாராபுரம்
Tags
தாராபுரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக