ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செயல்பாடு, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தில் இல்லை என கருத்து கேட்பு கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்ற சாட்டு கட்டுமான தொழிலாளர்கள் குறைகள் ஒரு மாதத்தில் தீர்க்கப்படும், கருத்து கேட்பு கூட்டத்தில் வாரிய தலைவர் உறுதி
ராணிப்பேட்டை, ஏப். 2 - கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு குறைகள் ஒரு மாத காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் உறுதி அளித்துள்ளார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் கருத்து கேட்பு கூட்டம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா புதனன்று (ஏப். 2) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் கள் நல வாரிய தலைவர் பொன் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ராணிப்பேட்டை மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு வழங்கப்படு
வதில்லை என தொழிற்சங்கநிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு பதிலளித்த வாரிய தலைவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் தொடர்பான குளறுபடிகள் அதிகமாக உள்ளது. அதனால் தான் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடத்த திட்டமிட்டோம் என தெரிவித்தார். மேலும் கட்டுமான தொழிலாளர்களின் குறைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்தால் அதை ஒரே நாளில் அனைத்து துறை அதிகாரிகளை அழைத்து முடித்துக் கொடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். ஒரு மாதத்தில் எந்த குறைபாடும் நிலுவை இல்லை என்ற அளவிற்கு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இறப்பு மற்றும் ஓய்வூதிய பண பலன்கள் உரிய காலத்தில் வழங்க வேண்டும். தொழிலாளர்கள் தொழிற்சங்கம் வாரியம் இணைந்து செயல்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் கட்டுமான தொழிலாளர்களின் குறைபாடுகள் கலைத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இதில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், தொழிலாளர் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன், நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் பழனி, சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் என். ரமேஷ், பொதுச் செயலாளர் த. ஞானமுருகன், ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் எ.எஸ். சங்கர் மேஸ்திரி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக