கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்குதல் தமிழ்நாடு அரசு எழுது பொருள் மற்றும் அச்சகத்துறையின் புதிய கிளைஅச்சகம் திறப்பு விழா.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்கும் விழா மற்றும் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் புதிய கிளை அச்சகம் திறப்பு விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களும் மற்றும் மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திருமதி.கயல்விழி செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நிகழ்வில்,
திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் தா.கிறிஸ்துராஜ் (இஆப) அவர்களும், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மாண்புமிகு மேயர் ந. தினேஷ்குமார் அவர்கள் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இல.பத்மநாபன் திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளர் ஈ. தங்கராஜ் , துணை மேயர் பாலசுப்ரமணியம் அவர்களும் 52 வட்ட கழக செயலாளர் நந்தகோபால், மாவட்ட , மாநகர திமுக நிர்வாகிகள் /மற்றும் திமுகவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக