நாட்டு வெடி வெடித்து சிதறி வாலிபர் விரல்கள் துண்டானது தொடர்பாக பட்டாசு கடை உரிமையாளர் கைது! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஏப்ரல், 2025

நாட்டு வெடி வெடித்து சிதறி வாலிபர் விரல்கள் துண்டானது தொடர்பாக பட்டாசு கடை உரிமையாளர் கைது!

 நாட்டு வெடி வெடித்து சிதறி வாலிபர்  விரல்கள் துண்டானது தொடர்பாக பட்டாசு கடை உரிமையாளர் கைது!

வீட்டில்  பதுக்கி வைத்திருந்த 59 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்.

வாணியம்பாடி, ஏப்.17- 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சபரி (வயது 24). இவரது வீட்டில் அனுமதியின்றி நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த தாக கூறப்படுகிறது. இரண்டு தினங் களுக்கு முன்பு இரவு நேரத்தில் வீட்டில் இருந்த பட்டாசு திடீரென வெடித்து சிதறியது. இதில் சபரியின் கை விரல்கள் துண்டாகி கண்களிலும் காயங்கள் ஏற்பட்டது. படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சபரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் ஐயப்பன் என்பவர் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் கடை வைத்து பட்டாசுகளை விற்பனை செய்து வரும் நிலையில் அவரது உறவினரான சபரி  தனது வீட்டில், நாட்டு வெடிகுண்டு மற்றும், பட்டாசுகளை தயாரித்து, அதனை ஐயப்பனிடம் அளித்து வந்துள்ளார், 
இந்நிலையில் சபரி தனது வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டை தயாரித்து கொண்டு இருந்த போது திடீரென நாட்டு வெடிக்குண்டு ஒன்று வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது என்று தெரியவந்தது.சம்பவம் குறித்து வேலூர் தடயவியல் மற்றும் வெடி பொருள் நிபுணர்கள் மற்றும் அம்பலூர் போலீசார் ஐயப்பன் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி மற்றும் பட்டாசுகளை தயார் செய்ய வைத்திருந்த 59 கிலோ வெடி மருந்து களை பறிமுதல் செய்தனர்.மேலும் பட்டாசு கடை  உரிமையாளர் ஐயப்பன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை அம்பலூர் போலிசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad