தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின்
7 ஆம் ஆண்டு முதல் நிர்வாகக்குழு கூட்டம் தாராபுரம் தமிழ் கலை அரங்கத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு
அதன் மாநில தலைவர் அயன்புரம் ஆர்.பாபு தலைமை தாங்கினார்.மாநில துணை செயலாளர்
தாராபுரம் எஸ்.ஜாபர்சாதிக்,துணை பொதுச் செயலாளர் சுரேஷ் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில பொது செயலாளர்
கா.தேவேந்திரன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:-
சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் மீது கொடுக்கும் புகார்கள் மீது முறையாக அழைப்பாணை கொடுத்து இரு தரப்பையும் அழைத்து விசாரிக்காமலேயே அரசு விசாரணை அலுவலர்களுக்கு ஒருதலைபட்சமாக முடித்து வைக்கும் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திற்கு கண்டனம். சமுக ஆர்வலர்கள் அனுப்பும் மேல்முறையீட்டு மனு மீது இரு தரப்பையும் அழைத்து விசாரிக்காமல் தாமாகவே விசாரணை நடத்தி பொது தகவல் அலுவலர்களை காப்பாற்றி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேசி அனுப்பும் தமிழ்நாடு தகவல் ஆணையர்களை கண்டிக்கிறோம்
ஆர்.டி.ஐ சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த பிரிவுகளை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தும் ஒன்றிய மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஆதரவளிக்கின்றோம். சமூக ஆர்வலர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு பதியப்படுவதை உடனடியாக நிறுத்திட வேண்டும் என தமிழ்நாட்டு முதல்வருக்கு கோரிக்கை வைக்கின்றோம்.
சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் புகாரின் மீது உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு காவல்துறையை கேட்டுக்கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில துணை பொதுச் செயலாளர்கள் ஏ.அழகப்பா, ஏ.ஜெயந்தி மாவட்ட தலைவர் கே.ராமர்
மாவட்ட செயலாளர் சி.விஜயசுந்தரம், ,மாவட்ட பொருளாளர்,கே.லட்சுமணன்
மாவட்ட துணை தலைவர் ஆர்.கார்த்திகேயன்,தாராபுரம் சமூக ஆர்வலர் சிவசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஜி.ராஜா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக