சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முத்தமிழ் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி.யில் நடைபெற்று வரும், ஐம்பெரும் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வாக கல்லூரியின் முத்தமிழ் விழா இன்று நடைபெற்றது. அழகப்பா அரசு கலைக்கல்லூரித் தமிழ்த்துறை இணைப் பேராசிரியரும் தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் சிதம்பரம் வரவேற்புரை நல்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமையேற்றுத் தனது தலைமையுரையில் தமிழின் பெருமைகளையும் முத்தமிழ் விழாவின் சிறப்புகளையும் எடுத்துரைத்து உரை நிகழ்த்தினார். இயற்றமிழில் என்றுமுள தென்தமிழ் என்னும் பொருண்மையில் சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஹேமமாலினி அவர்கள் உணர்வில், உயிரில் கலந்தது தமிழ் என்பதனை எடுத்துரைத்து உரை நிகழ்த்தினார். இசைத்தமிழின் சிறப்புகளைத் திருவையாறு அரசு இசைக்கல்லூரியைச் சார்ந்த செல்வி பைரவி பண்ணும் பாட்டும் என்னும் பொருண்மையில் இசைப்பேருரை நிகழ்த்தினார். நடன, நாடகத்தமிழைச் சிறப்பிக்கும் வகையில் நமது கல்லூரியின் நுண்கலை மன்ற மாணவிகள் ரச்சனா, நந்தினி, சௌந்தர்யா, வீரலெட்சுமி, ரக்ஷியா ஆகியோர் நடன, நாடக அரங்கேற்றம் செய்தனர். தமிழ்த்துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் குமார் அவர்கள் நன்றியுரை நவில விழா இனிதே நிறைவுற்றது. முத்தமிழ் விழாவில் ஏராளமான பேராசிரியர்களும், ஆசிரியரல்லாப் பணியாளர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக